Posts

Showing posts from 2018

அவர் ஒரு சரித்திரம் -006

Image
"அவர் ஒரு சரித்திரம்" -006 பிறந்ததிலிருந்தே தாய் தந்தையை அறிந்திராத ஒருவன் தன தாயைக் கண்டவுடன் உணர்ச்சிப் பெருக்கில் பாடும் ஒரு பாடல். "தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே" - தெய்வ மகன் படத்திலிருந்து. பாடலைப் பாடியவர் டி எம் சௌந்தரராஜன். இசை எம் எஸ் விஸ்வநாதன். இயற்றியவர் - கவியரசர். பாடலுக்கு உயிரூட்டியிருப்பவர் நடிகர் திலகம் அவர்கள். தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே  தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை  கண்டு கொண்டேன் அன்னையை இங்கு கண்டு கொண்டேன் அன்னையை என்று பாடும்பொழுது சிறிது நிறுத்தி, தான் கண்டது கனவா இல்லை நனவா என்ற திகைப்பையும் ஆச்சரியத்தையும் சில நொடிகளுக்குள் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்.  தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே  தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை  கண்டு கொண்டேன் அன்னையை தெய்வமே, தெய்வமே ... ஹோ ... ஹோ  பாடலின் இடையே வசனங்களில் புறக்கணிப்பட்ட மகனின் உணர்ச்சிகளை வெளிக் கொணர்வது மிகவும் தத்ரூபம். TMS பாடல் வரிகளையும் சரி, வசனங்களையும் சரி, தேவையான ஏற்ற இறக்கங்களுடன...

அவர் ஒரு சரித்திரம் - 005.

Image
அவர் ஒரு சரித்திரம் - 005. சிவாஜி பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.இன்று நம் மனங்களையெல்லாம் உருக வைக்கும் இரு காட்சிகள் . வியட்நாம் வீடு படத்திலிருந்து. காட்சி 1. "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ " மகாகவியின் இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொண்டு கண்ணதாசன் வியட்நாம் வீடு படத்திற்காக எழுதிய பாடல். வேலையிலிருந்து ஒய்வு பெற்ற கணவன் தனக்கும் தனது மனைவிக்கும் அந்த வீட்டில் மதிப்பில்லை என்பதைஉணர்ந்து, தன் மனைவி தனக்கு எவ்வாறெல்லாம் பணிவிடை செய்து வந்தாள் என்பதை எண்ணி மனமுருகிப் பாடும் பாடல். படம் - வியட்நாம் வீடு; பாடியவர் - திரு டி எம் சௌந்தரராஜன். பாடலுக்கு இசை - கே வி மகாதேவன். பாடலை இயற்றியவர் - கவியரசர்  காலச் சுமைதாங்கியாக தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தனது இன்னலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக்காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவ...

அவர் ஒரு சரித்திரம் - 004

Image
அவர் ஒரு சரித்திரம் - 004 இன்றைய தொடரில் கௌரவத்தின் தொடர்ச்சி. எழுதுபவர் உங்களுக்காக நமது நடிகர்திலகமே! வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு!. ஆம் கௌரவம் படத்தைப் பற்றி நமது நடிகர் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி உங்களுக்காக இதோ.  "I AM BARRISTER RAJINIKANTH!... எடுத்த வழக்குகள் அத்தைனையுமே வெற்றி!. இறுமாந்தேன. நீதிதான் எனது உயிர். இப்படித்தான் கடமையாற்றினேன். விளைவு? ஏமாற்றம். எனக்கு கிடைக்க வேண்டியகௌரவமிக்க நீதிபதி பதவியை கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் சக வக்கீல் சகோதரர்கள்.! என்னுடைய வாதத் திறமையில் இருந்த நம்பிக்கையை வைத்து சதுரங்கமாடினேன். பல வழக்குகளில் நீதியை தூக்கி எறிந்து விட்டு வெற்றி ஒன்றியே லட்சியமாக கொண்டேன். என்னுடைய வாதத் திறமையினால் சட்டமே கதவுகளை திறந்து விட்டது.  வாதத் திறமையின் ஜ்வாலையை தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே போன நீதி தேவதையை அழைத்து வந்தான் எனது அண்ணன் மகனான நான் வளர்த்த கண்ணன். "நீதிக்கே துணிந்து நின்றேன்  நினைத்த்தெல்லாம் ஜெயித்து வந்தேன் .  வேதனைக்கு ஒரு மகனை  வீட்டினிலே வளர்த்து வந்தேன் " ...

அவர் ஒரு சரித்திரம் 003:

Image
அவர் ஒரு சரித்திரம் 003: தங்கை மீது மட்டற்ற பாசத்தை வெளிப்படுத்தும் வேடம் என்றால் நடிகர் திலகத்தை மிஞ்ச வேறு எந்த நடிகரும் கிடையாது. அண்ணன் ஒரு கோயில், தங்கை, தங்கைக்காக போன்ற படங்களில் அவர் இத்தகைய வேடங்களை சிறப்பாக செய்திருந்தாலும் இவற்றிற்க்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் அமைந்த படம் பாசமலர். சிறு வயது முதலே தங்கைக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பாசத்துடன் வளர்த்து, தங்கையே தனது உலகம் என்று வாழ்ந்திருந்தவருக்கு, சூழ்நிலையின் காரணாமாக தங்கையை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது இருவரும் ஒருவரை எண்ணி மற்றொருவர், அவர்கள் தன் மீது எவ்வளவு பாசத்துடன் இருந்தனர் என்பதை தனது குழந்தைகளிடம் கூறுமாறு அமைந்த பாடல். பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைத்து விடும். "யானைப் படை கொண்டு சேனை பல வென்று" என்று பாடும்போது இளவரசனாக வாழப் பிறந்தவன் நீ, அத்தையின் மகளை மணம்புரிந்து சீரும் சிறப்புடனும் வாழவேண்டியவன் என்று சிவாஜி ஆற்றாமையை பாடும்போது நமது மனம் வலிக்கின்றது. "தங்கக் கடியாரம்" என்று பாடும்போது, உனது மாமன் உனக்காக இந்த உலகத்தையே சீராக அளிப்பார் என்ற ப...

அவர் ஒரு சரித்திரம் - 2

Image
அவர் ஒரு சரித்திரம் - 002 வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்து வீரமரணத்தைப் புன்னகையுடன் தழுவிக் கொண்டவர். இறுதி வரை உறுதி குறையாமல் போரிட்டவர், நண்பர்கள் என்னும் நயவஞ்சகர்ளால் காட்டிக்கொடுக்கப்பட்டு மரணத்தை தழுவிய வீரர். வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் கண்ணால் கண்டதில்லை. அவரை நம் கண்முன்னே நிறுத்தி அவரது வீரத்தை நமக்கு எடுத்துரைத்தவர் நமது நடிகர் திலகம். இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல். முதல் முதலில் உலக அளவில் பரிசு பெற்ற இந்தியப் படம். முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரையுடன் நடந்த போரில் வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். அப்போது ...

அவர் ஒரு சரித்திரம் - 1

Image
அன்பும் பண்பும் நிறைந்த சிவாஜி ரசிகர்களுக்கு, வணக்கங்கள் பல.நமது நடிகர் திலகத்தின் நடிப்பை நாம் ஒவ்வொரு அணுவும் ரசித்து பலமுறை ருசித்து வந்துள்ளோம். இருந்தாலும் மீண்டும் மீண்டும் அவற்றை அசை போடுவதில் நமக்கு எப்போதும் தணியாத தாகமே. அவரைப் பற்றியும், அவரது நடிப்பைப் பற்றியும் நான் ரசித்தவாறு "அவர் ஒரு சரித்திரம்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத உள்ளேன். குறைந்தது 100 தொடர்களாவது எழுத அவா. நடிகர் திலகத்தின் ஆசிகளுடன் அதை சாதிப்பேன் என்று நம்புகிறேன். முதல் பதிவு அவரைப் பற்றிய ஒரு சிறு நினைவு கூறல். தொடரும் பதிவுகள் அவர் ஏற்ற பாத்திரங்களின் சிறப்பைப் பற்றியது. அனைவரும் ரசித்து இன்புறுவீர்கள் என நம்பிக்கையுடன் துவங்குகிறேன். அவர் ஒரு சரித்திரம்: 1  தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிந்தையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் பலரை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜிகணேசனே. காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன...