அவர் ஒரு சரித்திரம் - 2
அவர் ஒரு சரித்திரம் - 002
வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்து வீரமரணத்தைப் புன்னகையுடன் தழுவிக் கொண்டவர். இறுதி வரை உறுதி குறையாமல் போரிட்டவர், நண்பர்கள் என்னும் நயவஞ்சகர்ளால் காட்டிக்கொடுக்கப்பட்டு மரணத்தை தழுவிய வீரர்.
வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் கண்ணால் கண்டதில்லை. அவரை நம் கண்முன்னே நிறுத்தி அவரது வீரத்தை நமக்கு எடுத்துரைத்தவர் நமது நடிகர் திலகம். இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல். முதல் முதலில் உலக அளவில் பரிசு பெற்ற இந்தியப் படம்.
முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரையுடன் நடந்த போரில் வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.
அப்போது இருவரிடையே நடக்கும் காரசாரமான உரையாடல் மிகவும் சுவையாக இருக்கும். நடிகர் திலகம் வீரம் கொப்பளிக்க ஜாக்சன் துரையை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் காட்சி மிகவும் அருமை. அதில் சிறிது எள்ளலும் இருக்கும்.

ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்படுமுன் அவர் பேசும் வீர வசனங்கள், தூக்குக் கயிற்றை சிறிதும் மனம் கலங்காமல் ஏற்றுக் கொள்ளும் வீரம், இறப்பதற்குமுன் கடைசியாக அளிக்கப் பட்ட வாய்ப்பை துச்சமாக உதறித் தள்ளும் வீரம், இவை அனைத்தையும் மிகவும் அனாயாசமாக வெளிப்படுத்தியிருப்பார். இவரது அந்த வசனங்களைக் கேட்கும் ஒவ்வொருக்கும் கண்டிப்பாக நாட்டுப் பற்று அதிகரிக்கும்.
இது போன்று ஒன்றல்ல, பல படங்களில் நாட்டுப் பற்றை வலியிறுத்தி, பல தேசியத் தலைவர்களை நமக்கு காட்டியவர். தேசபக்திக்கு இவரது நடிப்பு ஒரு பாட நூல் என்றால் அது மிகையாகாது.
ஜெய்ஹிந்த்!
(எனது கைவண்ணத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நமது நடிகர்திலகம்)
Links: 1. dialogues with Jakson. 2. Climax scene.
https://www.youtube.com/watch?v=BhG-nxOZs24
https://www.youtube.com/watch?v=0MGMEclxNno
Comments
Post a Comment