அவர் ஒரு சரித்திரம் -006
"அவர் ஒரு சரித்திரம்" -006
பிறந்ததிலிருந்தே தாய் தந்தையை அறிந்திராத ஒருவன் தன தாயைக் கண்டவுடன் உணர்ச்சிப் பெருக்கில் பாடும் ஒரு பாடல்.
"தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே" - தெய்வ மகன் படத்திலிருந்து. பாடலைப் பாடியவர் டி எம் சௌந்தரராஜன். இசை எம் எஸ் விஸ்வநாதன். இயற்றியவர் - கவியரசர். பாடலுக்கு உயிரூட்டியிருப்பவர் நடிகர் திலகம் அவர்கள்.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
இங்கு கண்டு கொண்டேன் அன்னையை என்று பாடும்பொழுது சிறிது நிறுத்தி, தான் கண்டது கனவா இல்லை நனவா என்ற திகைப்பையும் ஆச்சரியத்தையும் சில நொடிகளுக்குள் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே, தெய்வமே ... ஹோ ... ஹோ
பாடலின் இடையே வசனங்களில் புறக்கணிப்பட்ட மகனின் உணர்ச்சிகளை வெளிக் கொணர்வது மிகவும் தத்ரூபம். TMS பாடல் வரிகளையும் சரி, வசனங்களையும் சரி, தேவையான ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்திருக்கிறார்.
மஞ்சள் கொஞ்சும் மகாலட்சுமி என் தாய்
சந்தித்தேன் நேரிலே, பாசத்தின் தேரிலே
தெய்வமே, தெய்வமே
அந்த அழகுத் தெய்வத்தின் மகனா இவன் ஹா ...
தனது முகத்தை அருவருப்புடன் தடவிப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு வெறுப்புடன் அழும் காட்சி அனைவரையும் கலங்க வைத்து விடுகிறது.. சிவாஜி கணேசன் ஒருவாரால்தான் தனது இமேஜைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தனக்களித்த பாத்திரத்தை திறம்பட செய்வதில் முனைப்புடன் இருக்க முடியும்.
தன்னுடைய உடன்பிறந்த, அழகான தம்பியைக் கண்ட ஆனந்தத்தில், உணர்ச்சி பூர்வமாக
"முத்துப் போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்
ஓடினேன்......ஓடினேன்....
அட ராஜா என் தம்பி வாடா ..
அண்ணா...அண்ணா..
அண்ணா என ( ஒரு சிறு இடை வெளி) சொல்வான் என (மறுபடியும் இடைவெளி) உடன் பான்கோசின் ஆர்ப்பாட்டமான தாள நடை.
அண்ணா என சொல்வான் என பக்கம் பக்கம் சென்றேன்
(இப்போது சிறிது சுருதியைக் குறைத்து)
அண்ணா என சொல்வான் என பக்கம் பக்கம் சென்றேன்
தான் யார் என்று அறியாமால் தன தம்பி தன்னை தாக்கியதை எண்ணி
"குழந்தைக் கையை கடித்து விட்டது.. போடா போ"
நான்குவரிகளையும் திரு TMS வெவ்வேறு ஸ்தாயில் உணர்ச்சி பொங்க பாட, சிவாஜி அதற்கேற்ப பாவனைகளுடன் நடிக்க, மனம் சிறிது கனக்கிறது. குழந்தை கையைக் கடித்து விட்டது என்ற இடத்தில தலைவரின் முகபாவனையை பாருங்கள், என்ன ஒரு வாத்சல்யம் தென்படுகின்றது. கண நேரத்தில் எப்படி டக் டக் என்று இவரால் மட்டும் உணர்ச்சிகளை மாற்றி மாற்றி வெளிப்படுத்த முடிகின்றது!
தெய்வமே, தெய்வமே
தெய்வமே, தெய்வமே (இரண்டாம் முறை தெய்வமே, தெய்வமே எனும்போது சிறிது வித்தியாசமான நடை)
அன்னையைப் பார்த்த மகிழ்ச்சியில்
"அன்னையைப் பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
அன்னையைப் பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
இன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே"
தாயின் மடி இது வரை கிடைக்காத தவிப்பை தாயின் மடிக்கு ஏங்குவதையும் சிவாஜி உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்துகிறார்.

தாய் , தந்தையில்லாமல் எதுவும் இல்லை என்பதை
"வேரில்லாமல் மரமா, மரமில்லாமல் கிளையா கிளையில்லாமல் கனியா, எல்லாம் ஒன்று|
தெய்வமே, தெய்வமே
தெய்வமே, தெய்வமே
கண்ணீரினில்... உண்டாவதே...
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது .. போடா போ..
தந்தையையும் பார்த்துவிட்ட மன நிறைவில்
தந்தையைப் பார்த்த பின் என்னவேண்டும் நெஞ்சமே
தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே
தனது குரூரமான தோற்றத்தினால் தன்னைப் புறக்கணித்து விட்டார்கள் என்ற வருத்தம் துளியும் இல்லாமால் அவர்கள் நலத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டும் மகனது உள்ளம் தூய அன்பின் வெளிப்பாடு.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
ஹோ ... ஓஹோ... ஹோ ... ஓஹோ...
பாடலின் இறுதியில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தனக்கு ஆதரவு அளித்த டாக்டர் மேஜரின் காலடியில் விழுந்து கதறும் காட்சி கண்டிப்பாக கல் மனதையும் கரைய வைக்கும்.
இந்தப் பாடலில் முதல் மகனாக வரும் சிவாஜி மிகவும் திறம்பட நடித்துள்ளார். இதுபோன்ற ஒரு சிறந்த நடிப்பை எவரிடமும் காண முடியாது. மூன்று பாத்திரங்களையும் திறம்பட செய்திருந்தாலும், இந்தப் பாத்திரம் அனைவரையும் கவர்ந்து விடுகின்றது. இறுதியில் அவர் இறக்கும் காட்சி, கல் மனதையும் கரைய வைத்து விடும்.
LINK FOR THE SONG:
https://www.youtube.com/watch?v=vT_TCJgOco8
Comments
Post a Comment