அவர் ஒரு சரித்திரம் - 004

அவர் ஒரு சரித்திரம் - 004

இன்றைய தொடரில் கௌரவத்தின் தொடர்ச்சி. எழுதுபவர் உங்களுக்காக நமது நடிகர்திலகமே! வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு!. ஆம் கௌரவம் படத்தைப் பற்றி நமது நடிகர் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி உங்களுக்காக இதோ. 

"I AM BARRISTER RAJINIKANTH!...

எடுத்த வழக்குகள் அத்தைனையுமே வெற்றி!. இறுமாந்தேன. நீதிதான் எனது உயிர். இப்படித்தான் கடமையாற்றினேன். விளைவு? ஏமாற்றம். எனக்கு கிடைக்க வேண்டியகௌரவமிக்க நீதிபதி பதவியை கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் சக வக்கீல் சகோதரர்கள்.!

என்னுடைய வாதத் திறமையில் இருந்த நம்பிக்கையை வைத்து சதுரங்கமாடினேன். பல வழக்குகளில் நீதியை தூக்கி எறிந்து விட்டு வெற்றி ஒன்றியே லட்சியமாக கொண்டேன்.

என்னுடைய வாதத் திறமையினால் சட்டமே கதவுகளை திறந்து விட்டது. 

வாதத் திறமையின் ஜ்வாலையை தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே போன நீதி தேவதையை அழைத்து வந்தான் எனது அண்ணன் மகனான நான் வளர்த்த கண்ணன்.

"நீதிக்கே துணிந்து நின்றேன் 
நினைத்த்தெல்லாம் ஜெயித்து வந்தேன் . 
வேதனைக்கு ஒரு மகனை 
வீட்டினிலே வளர்த்து வந்தேன் "

சமூகம் அதைத் தெரிந்து கொண்டபோது ரஜினிகாந்த் உயிரோடு இல்லை. இதுதான் கெளரவம். இதில் நான் தந்தையும் மகனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன்.

இதன் ஆசிரியரான வியட்நாம் வீடு சுந்தரம் ஆர்வத்தோடு பணியாற்றும் இளைஞர். அவரது வெற்றியை நான் பூரிப்போடு வரவேற்கிறேன். கெளரவம் படத்தில் என் உழைப்பை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறேன். அதன் வெற்றியை காண ஆவலோடு காத்திருக்கிறேன்."

திரைவானம் : நவம்பர் 1973 இதழில் கெளரவம் படத்தின் வெளியீட்டைப் பற்றி சிவாஜி கணேசனின் பேட்டி. (EDITED)

ஜெய் ஹிந்த்!

நமது நடிகர் திலகம் பிரிட்டிஷ் அரசராகவும் இளவரசராகவும் தோன்றும் காட்சி.

Comments

Popular posts from this blog

அவர் ஒரு சரித்திரம் - 005.

அவர் ஒரு சரித்திரம் - 2